Categories
தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கவனமா இருங்க….. 3 மாவட்ட மக்களுக்கு….. கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது.

சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு 3000 என்ற அளவில் அளவில் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட, அதை தொடர்ந்து, மதுரை, தேனி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மதுரையில் ஒரே நாளில் மேலும் 266க்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 10,884 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5757 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் மேலும் 254 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த எண்ணிக்கை 4722 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு இவ்வளவு வேகமாக அதிகரித்து வருவதால், மூன்று மாவட்ட மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த வரிசையில் விருதுநகர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |