Categories
மாநில செய்திகள்

மக்களே! ரேஷன் அரிசிக்கு பதிலாக….ரூ.3 ஆயிரம் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் அளிக்கப்படம் என்பது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ரேஷன் அரிசி பெறும் அனைத்து சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

தற்போது அரசின் கையிருப்பில் போதுமான நிதி இருப்பதால் சமூக நல அமைச்சர் கந்தசாமியின் பரிந்துரையின்படி, அனைத்து சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்து மாதங்களுக்கான வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக ரேஷன் அட்டை ஒன்றுக்கு ரூபாய் 3000 வழங்கப்படுவதாக ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அனைத்து அட்டைதரர்களுக்கும் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |