கோவை சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த 1_ஆம் வகுப்பை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கே கூடியிருந்த பொது மக்கள் சந்தோஷ்குமாரை தாக்கினர். உடனே அங்கிருந்த காவல்துறையினர் சந்தோஷ்குமாரை பத்திரமாக அழைத்து செனிற்றனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.