Categories
தேசிய செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… டிஆர்டிஓ – டாக்டர் ரெட்டீஸின் 2டிஜி மருந்து… நேற்று முதல் அறிமுகம்…!!!

மத்திய அரசின் டிஆர்டிஓ என்ற அமைப்பும், தனியார் நிறுவனமான டாக்டர் ரெட்டீஸும் இணைந்து கொரோனா சிகிச்சைக்கு புதிய 2 டிஜி மருந்து உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து நேற்றுமுதல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு பத்தாயிரம் பாக்கெட்டுகள், 2 டிஜி மருந்துகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். கொரோனாவிற்கு தற்போது பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பலன்களைத் தரவில்லை.

இருப்பினும் தற்போது மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ, ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸும் நிறுவனமும் இணைந்து 2டிஜி என்ற பெயரில் தூள் வடிவிலான மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். கொரோனாவுக்கு என்று பிரத்யேகமாக இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது 2 மற்றும் 3ம் கட்ட சோதனையில் நம்பிக்கை தரும் முடிவுகளை தந்ததாகவும் அவசர கால தேவைக்கு இவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தூள் வடிவிலான இம்மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கும் போது குறைவான மற்றும் மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர்களின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |