Categories
மாநில செய்திகள்

மக்களே பயப்படாதீங்க!!…. உங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க அரசு இருக்கிறது….. CM ஸ்டாலின் உறுதி….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை தொடர்ந்து கண்காணிப்பதோடு, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று தற்போது இல்லாவிடிலும் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கை வசதிகள், பரிசோதனை வசதிகள், போதுமான அளவு ஆக்ஸிஜன் வசதி, தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு அரசு தயார் நிலையில் இருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |