Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் கூட “ADUJST” பண்ண முடியாது…. அடிச்சி புடிச்சி வாங்கியாச்சு…. தொடர் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்….!!

டாஸ்மாக் கடை தொடர்ந்து 3 நாட்கள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் குவிந்து விட்டனர்.

தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கள்), மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்) என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்படுவதால் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க குவிந்து விட்டனர்.

அப்போது அரசு நெறிப்படுத்திய வழிமுறைகளை கடைபிடிக்காமல், கொரோனா தொற்று அச்சமில்லாமல் மது பிரியர்கள் வேகமாக மதுபானங்களை வாங்கி சென்றதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையானது அமோகமாக இருந்துள்ளது. அங்குள்ள ஆவாரம்பாளையம், காந்திபுரம், புளியகுளம் போன்ற பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். மேலும் பறக்கும் படையினர் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மொத்தமாக யாரும் மதுபானங்களை வாங்கி செல்கின்றனரா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Categories

Tech |