பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம் கட்டப்படவில்லை என தெரிவித்தனர்.
கடந்த சில வருடங்களாக பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அறையில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் கோடை காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றோம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனுஅளித்தோம் மற்றும் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.