அட்லஸ் விபிஎன் என்ற நிறுவனம் தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி சமூக வலைதளங்களில் அதிக பாதிப்புகளை கொண்டது என்றால் கூகுள் குரோம் என்று கூறியுள்ளது. இந்த கூகுள் குரோமில் CVE 2022-3318, CVE 2022-3314, CVE 2022-3309, CVE 2022-3307 போன்ற பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு நடப்பாண்டில் மட்டும் 303 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3159 பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் அதில் என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்ற விளக்கத்தை ஆய்வறிக்கையில் சரியாக கூறவில்லை.
ஆனால் கூகுள் குரோமில் இருக்கும் பாதிப்புகள் கணினியின் மெமரியை கூட கடுமையான அளவில் பாதித்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் கூகுள் குரோம் இன் புதிய வெர்சனான 106.0.5249.61-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். இந்நிலையில் கூகுள் குரோமிற்கு அடுத்த இடத்தில் 117 பாதிப்புகளுடன் மொசில்லா பயர் பாக்ஸ் 2-ம் இடத்திலும், மைக்ரோசாப்ட் எட்ஜ் 103 பாதிப்புகளுடன் 3-வது இடத்திலும், சஃபாரி 26 பாதிப்புகளையும் நடபாண்டில் மட்டும் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சஃபாரியில் மட்டும்தான் மிகக் குறைந்த அளவு பாதிப்பு இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.