கொரோனா தாக்கம் குறித்து ஸ்பெயின் நாட்டின் ஆய்வாளர்கள் புதிய தகவலை கொடுத்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குறித்து தற்போது வெளியிட்ட புதிய தகவல் மக்களின் கவனம் பெற்றுள்ளது.அதாவது தலையில் வழுக்கை ஏற்படுத்தும் ஆன்ட்ரோ ஜென் ஹார்மோன் மனித செல்களை தாக்க கொரோனாவுக்கு உதவி செய்கிறது. கொரோனா பாதித்த ஆண்களின் மரண சதவீதத்தை அதிகப்படுத்துவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்ற புதிய எச்சரிக்கையை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர்.
கொரோனா உடலில் செய்யும் சேதத்திற்கும், தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் ஆன்ட்ரோ ஜென் ஹார்மோனுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. கொரோனா நமது செல்களில் நுழையும் கதவாக வழுக்கையை ஏற்படுத்தும் இந்த ஹார்மோன்கள் செயல்படுகிறது. வழுக்கை உள்ளவர்களை கொரோனா தாக்கினால் அதிக வீரியத்துடன் உடலில் செயல்படுகிறது.
கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சுமார் 70 சதவீத ஆண்களுக்கு தலையில் வழுக்கை இருப்பதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன என அடுத்தடுத்து புதுப்புது அதிர்ச்சி தகவலை ஸ்பெயின் நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது உண்மைதானா ? எத்தனை நபர்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சி ? குறைவான நபர்களை வைத்து செய்தார்களா ? இல்லை அதிகமான நபர்களை வைத்து செய்தார்களா ? என தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியுள்ளார்கள்.