Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே கவனம்….. தயிரா…? மோரா…? எது பெஸ்ட்…..!!

தமிழக மக்களின் உணவு முறைப்படி உடல் நலத்திற்கும் தயிர் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தமிழக மக்களின் உணவு முறை பயன்பாட்டில் தயிரும், மோரும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தயிரை விட மோருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஏனெனில், தயிரும் பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் தயிர் அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும்,

மலச்சிக்கல் ஏற்படும், இரவு நேரங்களில் தயிரை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்பது முன்னோர்களின் கூற்று. இதனுடன் ஒப்பிடுகையில், மோர் சேர்த்து சாப்பிடுவதும், குடிப்பதும் உடலுக்கு மிக நல்லது. ஏனெனில் வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாகவே மோர் விளங்கிவருகிறதே தவிர, கூடுதலாக எந்த நோயையும் பெரும்பாலாக அது ஏற்படுத்தாது.

Categories

Tech |