Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மக்கள் பீதி..!!

பாளையங்கோட்டையில் புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் பகுதியில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஜன்னல் மற்றும் கதவுகள் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர்.

Image result for நாட்டு வெடிகுண்டுகள்

அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் இரண்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றினர். போலீசார் விசாரணை நடத்தியதில் கணேசனின் இரண்டு மகன்களான சிவா மற்றும் அருள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதை கண்டுபிடிகப்பட்டது. தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |