Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரு!…. தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

வங்கக்கடலில் தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், இது நாகையிலிருந்து 333 கிலோமீட்டர் கிழக்கு தென் கிழக்கே காணப்படுகிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் டிசம்பர் 26-ம் தேதி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களிலும், தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு டிசம்பர் 26-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு‌ இருக்கிறது.

மேலும் இன்று முதல் 28-ஆம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல், அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் போன்றவைகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |