Categories
தேசிய செய்திகள்

மக்களே! இதற்கு இனி ஆதார் கட்டாயமில்லை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் Co-Win இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் தங்களை  பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்காக ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மக்களவையில் அளித்த எழுத்துபூர்வ பதிவில், “தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள ஆதார் கட்டாயமில்லை. இதன் மதிப்பீடு பணிகள் கோவின் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தகவல் பாதுகாப்பு கருதி அனைத்துமே மிக பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாதவர்கள் எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |