பெண்ணுக்கு கொலை மிரட்டல் கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் சித்ரா என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருத்தங்கலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் கார்த்திக், மணிகண்டன் போன்றோரிடம் வட்டிக்கு பணம் கேட்டதாக கூறப்படுகின்றது. அப்போது அவர்கள் உன்னுடைய அண்ணன் வாங்கிய கடன் எல்லாம் சரியாக தரவில்லை என்று சித்ராவிடம் சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சித்ரா வட்டிக்கு பணம் வேண்டாம் என்று கூறி பைனான்ஸ் நிறுவனதிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், மணிகண்டன் போன்றோர் சித்ராவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ததோடு, தலைமறைவாக இருக்கின்ற கார்த்திகை தீவிரமாக தேடி வருகின்றனர்.