Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி பகுதியில் சித்திக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது ஷர்மிளா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செய்யது ஷர்மிளா பாத்திமா உறவினரை பார்ப்பதற்காக மகாராஜன் நகர் சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செய்யது ஷர்மிளா பாத்திமாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது குறித்து செய்யது ஷார்மிளா பாத்திமா பாளையங்கோட்டை குற்றபிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |