Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்…. மர்மநபர்களின் செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உமா அங்குள்ள மெயின் ரோட்டில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது உமாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர்.

இதனையடுத்து உமாவை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் பறித்து சென்று தப்பி சென்றுள்ளனர். இது குறித்து உமா பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |