Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நம்ம நல்லதுக்குதான் சொல்லுறாங்க…. ஊரடங்கின்போது சுற்றித்திரிந்த வாகனஓட்டிகள்…. அபராதம் விதித்த காவல்துறையினர்….!!

ஊரடங்கின்போது தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன் பிறகும் வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

இதனால் அவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று திருமாநிலையூர் பாலம், பஸ் நிலையம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து  பணியில் நின்று தேவை இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கும் முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |