சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த 3,515 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முக கவசம் அணியாமல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 3,515 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.