பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சகுந்தலா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவம் பார்த்தும் சகுந்தலாவிற்கு சரியாகவில்லை. இந்நிலையில் ஈஸ்வரன் வழக்கம்போல் தோட்டத்தில் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார். அதன்பின் வீட்டில் சாப்பிடுவதற்காக வந்தபோது சகுந்தலா வாயில் நுரை தள்ளியபடி படுத்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த ஈஸ்வரன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சகுந்தலாவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சகுதலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.