விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மணிமேகலை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்றுவலி குணமாகாததால் மணிமேகலை மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிமேகலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மணிமேகலையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக மணிமேகலையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.