பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொங்குத்திபாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பூவாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பூவாத்தாள் சிறுநீரக நோய் உள்ளிட்ட சில நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சில லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை அளித்தும் நலம் பெற முடியாததால் மனமுடைந்த பூவாத்தாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூவாத்தாளின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.