Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகறாறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மதகுபட்டி பகுதியில் பிடாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த கோகிலா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கோகிலாவை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பிடாரன் எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |