Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்ற மகன்கள்… வீட்டில் கேட்ட அலறல்… பின்னர் நடந்த கொடூரம்….!!

திருச்செந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மெர்வின்- பவிதா. மெர்வின்  மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். பவிதா சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய மகன்கள் மூவரும் ஊரில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில்  திடீரென்று பவிதா அலறியுள்ளார்.

பவிதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது கணவர் மெர்வின் வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது சமையலறையில் பவிதாவின் உடல் தீப்பிடித்து எரிவதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக குடத்தில் இருந்த தண்ணீரை மனைவியின் மீது ஊற்றி தீயை அணைத்து உள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர்  உதவியுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றார்.

அங்கு  பவிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக  அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில்  பவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |