மூடி உடைந்த செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழக்குயில்குடி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதான ஜானு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஜானு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மூடி உடைந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்தாள்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜானு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.