Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன…! ஆர்யா-சாயிஷா தம்பதியருக்கு குழந்தை பிறந்தாச்சா…? அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்ட நடிகர் விஷால்…. மிகுந்த ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்கள்….!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த தமிழ் சினிமா நடிகரான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியருக்கு தற்போது பிறந்துள்ள பெண் குழந்தையை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான சாயிஷா வயது வித்தியாசம் பார்க்காமல் பிரபல நடிகரான ஆர்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு ஆர்யா நடித்த அனைத்து படங்களுக்குமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் முக்கியமாக ஆர்யா நடித்த பா ரஞ்சித் இயக்கத்தில் தயாரான சார்பாட்டா பரம்பரை என்னும் படம் அமேசான் நிறுவனத்தின் மூலம் நேரடியாக வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சார்பாட்டா பரம்பரை படம் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரபல நடிகரான விஷால் தன்னுடைய இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கு பின் நடிகர் ஆர்யாவின் பெண்குழந்தையை காண்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

Categories

Tech |