ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை கர்நாடக பெண் காவலர் அதிகாரி ஒத்திவைத்துள்ளார்.
கண்ணுக்கு புலப்படாத கொரோனோக்கு எதிரான யுத்தத்தில் போர் முனையில் உள்ள சிப்பாய்களை போல மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூட தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாளவல்லி பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனது திருமணத்தை ஒத்திவைத்தது தெரியவந்துள்ளது.
அவருக்கும் IAS அதிகாரியான டயமாப்பா என்பவருக்கும் கடந்த 5தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே ப்ரித்வி பணிபுரிந்து வரும் மாளவள்ளி பகுதி கொரோனோவின் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தனது திருமணத்தை ஒத்தி வைத்தார், அந்த பெண் அதிகாரி. மக்களை பாதுகாக்கும் பணி தான் தற்போது முக்கியமே தவிர தனது மணவிழா அல்ல என்று கூறியுள்ளார் ப்ரித்வி. இவரது முடிவை காவல்துறையினர், நடிகையும், கர்நாடக மாநில எம்பியுமான சுமலதா உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.