நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது .
மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து, சுலபமாக வெற்றி பெற்றது.முக்கியமாக நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ,பந்து வீச்சாளர்களின் பங்கு பெரிதாக காணப்பட்டது. சில தினங்களுக்கு முன் டெல்லி அணிக்கு எதிரான விளையாடிய போட்டியில், பந்துவீச்சில் சொதப்பிய சென்னை அணி, நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தீபக் சாஹர் 4 ஓவர்களில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து, முக்கிய 4 விக்கெட்டுகளை பஞ்சாப் அணிக்கு எதிராக கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து மற்றவர்களும் விக்கெட்டுகளை எடுக்க , சிஎஸ்கே அணி எளிதாக வெற்றியை கைப்பற்றியது . ஆனால் நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் சுவாரசியமாக இருந்தது. இந்த 2 விக்கெட்டுகளை ,சிஎஸ்கே அணி பவுலரான ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். அவர் பஞ்சாப் அணியின் கேப்டனான கே .எல் .ராகுலை, அவுட் செய்வதற்காக வேகமாக ஓடிவந்து ,ஸ்டெம்ப் மீது பந்தை வீசினார். இதனால் கே .எல். ராகுல் ரன் அவுட் ஆனார் . அதோடு கிறிஸ் மோரிஸ் அடித்த பந்தை, எகிரி பிடித்து கேட்ச் செய்தார் ஜடேஜா. இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் . எனவே ஜடேஜா போன்று பீல்டிங் செய்வதற்கு யாராலும் முடியாது ,என்று பிரபலங்கள் ,கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஜடேஜாவை புகழ்ந்து வருகின்றனர்.