பெலராஸ் மற்றும் லித்துவேனியாவின் எல்லைப்பகுதியில் இருந்து போலீசார் ஆண் நபரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
பெலாரஸ் மற்றும் லித்துவேனியா எல்லையில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது லித்துவேனியாவில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் அவரின் பையில் தொலைபேசி, வங்கி தொடர்பான அட்டைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டத்திற்கு புறம்பாக பெலராஸில் இருந்து தப்பிக்க முயலும் அகதிகளை லித்துவேனியா பாதுகாப்பு படையினர் பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஒருவேளை இறந்த இலங்கையரும் தப்பிச் செல்ல முயற்சித்த குழுவில் இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலோட்ஸ்க் எல்லைக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் விசாரணை மேற்கொள்கின்றனர். இது மட்டுமின்றி புலனாய்வாளர்களும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள தடயவியல்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளனர்.