கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள லிபியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் தற்போது மீண்டும் தென்பட்டு பேய் வீடு போல் காட்சியளிக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் லிபியா என்னும் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் கதவு 1992 ஆம் மூடப்பட்டுள்ளது. அதனால் இந்த அணையிலுள்ள நீர் மட்டம் உயர்ந்து Aceredo உட்பட 5 கிராமங்களிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
இதற்கிடையே Aceredo உள்ளிட்ட 5 கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்கள் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் அவர்களது போராட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு Aceredo உள்ளிட்ட 5 கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்கள் அணையிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் நீரின் காரணமாக தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இந்நிலையில் 32 வருடங்களுக்கு முன்பாக நீரில் மூழ்கிய அந்த கிராமங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகள் தற்போது அணையிலுள்ள நீர் குறைந்துள்ளதால் கண்களுக்கு தென்பட்டு பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கிறது.