Categories
உலக செய்திகள்

நிம்மதியாக இருக்கும் மக்கள்…. NSO குழுமத்தின் பேச்சால் சர்ச்சை…. பட்டியலில் உள்ள தலைவர்கள்…!!

பெகாசஸ் மென்பொருள் மூலம் மக்கள் நிம்மதியாக இருப்பதாக NSO நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பெகாசஸ் மென்பொருள் கண்காணிப்பதாக வெளியான தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடங்கி பிரான்ஸ் அதிபர் மேக்ரன் வரை பலரும் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் பல தலைவர்களும் தங்களது செல்போன்களையும் அதன் எண்ணையும் மாற்றி வருகின்ற நிலையில் பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேல் நிர்வாகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த மென்பொருள் உதவியினால் தான் மக்கள் இரவில் நிம்மதியாக தூங்குவதாகவும் பாதுகாப்பாக வெளியில் சென்று வருவதாகவும் கூறி உள்ளனர்.

இந்த தொழில்நுட்பமானது பயங்கரவாத அமைப்புகளை தடுக்கவும், குற்றங்களை காண்பதற்கும், புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உதவுகிறது. மேலும் உலகெங்கிலுமுள்ள சட்ட அமைப்புகள் இருளில் இருப்பதால் தீங்கு ஏற்படுத்தும் செயல்களை கண்காணிக்க எந்த ஒரு தீர்மானமும் இல்லை ஆகையால்தான் பல இணைய புலனாய்வு நிறுவனங்களுடன் கரம் சேர்த்துக்கொண்டு அரசுகளுக்கு இது உதவி புரிகிறது. இந்த நிறுவனம் எந்த தொழில்நுட்பத்தையும் இயக்கவில்லை என்றும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தரவுகளை நாங்கள் காணவும் வழியில்லை எனவும் கூறியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த சிறு உதவியை செய்து வருகிறோம்.

Categories

Tech |