அயோத்தி வழக்கில் சமரசக்குழு தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மிக மிக முக்கிய வழக்காக பார்க்கப்படும் அயோத்தி வழக்கு கடந்த 40 நாட்கள் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து அமைப்புக்குச் சொந்தமான அல்லது இஸ்லாமிய அமைப்புகள் சொந்தமா? என்ற மிக முக்கியமான வழக்கம். உச்சநீதிமன்றம் இப்படி ஒரு வழக்கு விசாரணை இதுவரை செய்திருப்பார்களா ? என்ற சந்தேகத்திற்கான விஷயமாக இருக்கும் அளவுக்கு இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா மட்டுமல்ல , உலக நாடுகளும் இதே உற்று நோக்குகிறது. ஏனென்றால் அயோத்தி விவகாரத்தில் இந்தியா எத்தகைய ஒரு கருப்புப் பக்கத்தை இன்று வரை சுமந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.
எனவே இந்த மாதிரியான சூழ்நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் மிக கவனமாக இந்த வழக்கைக் கையாண்டு வருகிறார்கள். 40 நாட்களாக விசாரித்து வரக்கூடிய நிலையில் ஒரு பக்கம் இந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சமரச குழுவானதும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த குழுவானது இந்து அமைப்பையும் , இஸ்லாமிய அமைப்புகளிடம் அவர்கள் பேசி ஒரு இறுதியான ஒரு முடிவுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறுவதால் பேச்சுவார்த்தைக்குழு நடத்திய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமரசக்குழு தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களையும் தங்களது தீர்ப்பை சுட்டிக்காட்டி அயோத்தி வழக்கின் தீர்ப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில் முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சர்ச்சைக்குரிய நிலம் இருக்கக்கூடிய பகுதி சமமாக பங்கிட்டு கொள்வதற்கு இஸ்லாமிய அமைப்புகள் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் இந்து கோவில் கட்ட விரும்பினால் கட்டிக் கொள்ளட்டும் , நாங்களும் மசூதி கட்ட கொள்வது கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் , அதையும் மத்திய அரசு கட்டித்தர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மத வழிபாட்டு இடங்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்பட சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனெற்றால் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நடைபெறுவது தவிர்ப்பதற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றம் இந்த இடத்தை சமமாக மூன்று பங்காகப் பிரித்து , இந்து கோவில் கட்டவும் , முசலின் மசூதி கட்டிக் கொள்ளவும் , மற்றொரு இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தவும் தெரிவித்தனர். அதே போல யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இந்த தீர்ப்பை வழக்க உச்சநீதிமன்றம் மிக கவனமுடன் இந்த வழக்கை கையாண்டு விசாரித்த நிலையில் சமரசக்குழுவின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.