தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய முடிகிறது. மேலும் நேர விரயம் ஆகிறது. இதனால் சீனாவில் பின்பற்றிய முறையை பயன்படுத்தி கொரோனா பரிசோதை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கருவிகள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது.
ஆனால் ஏப்., 12ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை வராத நிலையில் துரித பரிசோதனை கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. சுமார் ரூ. 8 கோடி மதிப்பிலான 40,032 கருவிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கண்டுபிடிக்க பிசிஆர் கிட் கருவிகள் உதவும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டாடா நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி நன்றி கூறியுள்ளார்.