பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இதில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதன் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ்- ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் அதிரடியாக விளையாடிய எவின் லூயிஸ் 7 பவுண்டரி ,ஒரு சிக்சர் அடுத்து விளாசி 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களம் இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னும்,ஜெய்ஸ்வால் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்பின் களமிறங்கிய மஹிபால் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார் .இதனால் அணியின் ஸ்கோர் மீண்டும் உயர்ந்தது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும் ,முகமது ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.இதன் பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 186 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.
இதில் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் அரைசதம் கடந்தார். அப்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 120 ஆக இருக்கும்போது கேஎல் ராகுல் 49 ரன்னிலும், மயங்க் அகர்வால் 67 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய மார்கிராம்- நிக்கோலஸ் பூரன் ஜோடி பொறுப்புடன் விளையாடினர் .இதில் பூரன் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து. இதனால் கடைசி இரண்டு ஓவரில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.