Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS KKR : கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டது . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி  முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர்  67 ரன்கள் குவித்தார். இதன் பிறகு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் மயங்க் அகர்வால் 40 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 12 ரன்னில் வெளியேறினார் . இதன்பிறகு களமிறங்கிய மார்கிராம் 18 ரன்னும் , தீபக் ஹூடா 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக  களமிறங்கிய ஷாருக்கான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் .இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில்  5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய ஷாருக்கான் 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Categories

Tech |