இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீக்கியது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது.
இந்த நிலையில் 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 3 வீரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர் . இந்நிலையில் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்குமாறு. நேற்று அறிவித்துள்ளது இதனால் அவர்கள் மூவரும் இனி உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.