இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரை கத்தியால் குத்தி கொன்ற பாலஸ்தீன இளைஞரின் குடும்பத்தாருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி இழப்பீடு தொகை அளித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையேயான மோதலில் பல சேதங்கள் ஏற்பட்டது. எனவே அதற்கு உதவி தொகையாக, அமெரிக்கா 112 மில்லியன் டொலர் அளித்தது. இதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியான Mahmoud Abbas இழப்பீடு வழங்கியிருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் வருடத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த Al-Halabi என்ற இளைஞர் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
எனவே இஸ்ரேலிய நாட்டின் காவல்துறையினர் அந்த இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் இஸ்ரேலிய நாட்டின் ராணுவம், அவரின் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கியது. வழக்கமாக இஸ்ரேலிய மக்களை எதிர்த்து அரசியல் தொடர்பாக தாக்குதல் நடத்துபவர்களுக்கு, அல்லது கொலை செய்யப்படும் நபர்களுக்கு பாலஸ்தீன அரசு இழப்பீட்டு தொகை கொடுத்து வருகிறது. அதன்படி Al-Halabi குடும்பத்தாருக்கு 42,000 டாலர் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.