கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் முத்தரப்பு போர் பயிற்சி “தோஸ்தி” என்னும் பெயரில் நடைபெறுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளின் முத்தரப்பு கூட்டு பயிற்சி போர் மாலத்தீவு கடல்பகுதியில் வைத்து நடைபெறுவதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த 2 நாள் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சிக்கு தோஸ்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியதாவது, மாலத்தீவு, இந்தியா, இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடற்படை செயல்திறனை அதிகப்படுத்துவது உட்பட பல முக்கிய காரணங்களால் இந்த தோஸ்தி என்னும் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பி8ஐஎன்னும் போர் விமானமும் இந்த தோஸ்தி என்னும் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.