Categories
உலக செய்திகள்

மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்…. எச்சரிக்கை விடுத்த வடகொரியா…. பொருட்படுத்தாமல் செயல்படும் தென்கொரியா….!!

வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத தென்கொரியா அமெரிக்க இராணுவத்துடனான பயிற்சிக்கான நேரம் குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

தென் கொரியா அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கோடைகால பயிற்சியில் ஈடுபடுவதற்கு முடிவுசெய்துள்ளது. இந்த முடிவுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது தென் கொரியாவின் இந்த முடிவு வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டிற்கிடையே மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தென்கொரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் செய்தியாவது, அமெரிக்க ராணுவத்துடனான கோடை கால பயிற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், தென் கொரியா, வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |