ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அங்கு தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்துவதற்கு தொடங்கியுள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததே இதற்கு காரணமாக திகழ்கிறது.
மேலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் என்னும் நகரை கைப்பற்றியதோடு மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் மிகவும் மோசமான நிலைமை நிலவுவதால் அங்கிருக்கும் பிரான்ஸ் மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் என்னும் இடத்திலிருந்து ஜூலை 19ஆம் தேதி பிரான்ஸ் மக்கள் நாடு திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஒன்று இயக்கப்படுகிறது.