இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதை இதற்கு உதாரணமாக என்று ஏழை பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு லாபம் எதுவும் கிடைப்பதில்லை என்று ரயில்வே இணைய மந்திரி ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது, தினசரி ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு எந்த லாபமும் கிடைப்பது இல்லை. ஒரு ரூபாய் செலவு செய்தால் 55 பைசா நஷ்டம் ஆகிறது. பயணிகள் ரயிலை இயக்குவதால் எந்த லாபமும் இல்லை. அதனால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனால் மோடி அரசு லாபத்துக்காக வேலை செய்யவில்லை, மக்களின் வசதிக்காக இது போன்ற சேவைகளை இயக்க வேண்டும் என்று மோடி கூறுகிறார். மேலும் பயணிகள் இயக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை சரக்கு ரயில் சேவை, மற்ற வருவாய் மூலம் சரிகட்ட முயற்சியில் செய்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.