மியான்மரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் .
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஜனநாயக ஆட்சியை கைப்பற்றி ராணுவத்தினர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் Depayin கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கரமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்களில் வெளியானது . இச்சம்பவம் குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, “சம்பவ தினத்தன்று அதிகாலையில் 4 ராணுவ லாரிகளில் பாதுகாப்பு படையினர் கிராமத்திற்கு வந்தனர். இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக உள்ளூர் மக்கள் இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்த முடிவு செய்தனர்.
ஆனால் அவர்களிடம் தரம் குறைந்தத ஆயுதங்கள் மட்டுமே இருந்ததால் பாதுகாப்பு படையினர் பயங்கரமான ஆயுதம் மூலமாக நடத்திய தாக்குதலால் உள்ளூர் மக்கள் இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்களிடம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது . இந்த இரு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதல் முடிந்தபிறகு மொத்தமாக 25 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது “என்று அவர் கூறினார் . இது குறித்து ஐநா சபை தெரிவிக்கையில், ராணுவப்படையினர் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடந்த வன்முறை சம்பவத்தில் சுமார் 2,30,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டி அடிக்க பட்டதாகவும் ,மேலும் 880 -க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகவும் , 5700-க்கும் மேற்பட்டவர்கள் காவலில் இருப்பதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மை இல்லை என்று மியான்மர் ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் .