Categories
உலக செய்திகள்

4 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணம்…. மரியாதையாக வரவேற்ற அரசி…. வெளியான முக்கிய அறிக்கை….!!

4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் இறுதி நாளன்று டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் திகழ்கிறார். இவர் 4 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் இறுதி நாளில் டென்மார்க்கின் தலைநகருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றுள்ளார். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை அந்நாட்டின் 2 ஆம் அரசியான மார்கரேட் வரவேற்று மரியாதையுடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பலரும் ஒன்றாக சேர்ந்த இந்திய-டேனிஸ் கூட்டு ஆணைய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்தியா பசுமை ஒத்துழைப்பு தோழமையை டென்மார்க் நாட்டுடன் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மிகப்பெரிய வர்த்தகங்களை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |