சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் ராமு மணிவண்ணன் என்பவர். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு பேராசிரியர் ராமமூர்த்தி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகை 18 லட்சத்தையும், ஏழு மாதங்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகம் இன்னும் தரவில்லை. இதனால் தனக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை வழங்க வேண்டும் என்று நேற்று அவரது அறையிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் பல்கலைக் கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் இரவு 8 மணிக்கு போராட்டத்தை முடித்துக் அறையிலிருந்து வெளியே வந்தார். அதன்பின் அவர் கூறியதாவது, எனக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் சம்பள பணத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் போராட்டம் நடத்தினேன். இப்பொழுது பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியதன் அடிப்படையில் நான் என் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு செல்கிறேன்.
எனக்கு கிடைக்கவேண்டிய ஓய்வூதியம் மற்றும் சம்பளம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். இதுபற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் அலுவலக தெரிவித்ததாவது, தணிக்கை துறையின் அனுமதி பெற்ற பின்னரே ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். தணிக்கைத்துறை கூறும் திருத்தங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டவுடன் அவர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று கூறினார்.