Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த  சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து  வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல்  செய்ததாகத் தெரிவித்தார்

இதைத்தொடர்ந்து குமாரின் மீது போலீசில்  அளித்த  புகாரின் பேரில் sv .மங்கலம் போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையில் குமாருக்கு உமா என்ற மனைவியும் , இரு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்துள்ளது. கணவன் கைதானது குறித்து பேசிய உமா, தனது கணவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்ததால் நான் என் தாய் வீட்டிற்கு வந்ததாகவும், இதுபோன்ற சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்துபவரை நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |