Categories
உலக செய்திகள்

‘பாட்டியை நல்ல பாத்துக்கல’…. பாசத்தில் பேரன் செய்த காரியம்…. அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம்….!!

பாட்டியை மருத்துவர்கள் கவனிக்காததால் பேரன் செய்த காரியம் அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள Tomsk நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் செர்கே என்பவர் அவரின் பாட்டியை கொரோனா அறையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனை அடுத்து அங்குள்ள மருத்துவர்கள் அவரின் பாட்டியை சரிவர கவனிப்பதில்லை என்று சக நோயாளிகள் கூறியுள்ளனர். இதனால் வருத்தமடைந்த அவர் மருத்துவர் போன்று உடை அணிந்து மூன்று நாட்கள் பாட்டியுடன் தங்கியிருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பாட்டியை மருத்துவமனை ஊழியர்கள் வேறொரு அறைக்கு மாற்றியுள்ளனர். இது தெரியாமல் செர்கே பாட்டியை தேடி வந்துள்ளார். அப்பொழுது அவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இதுகுறித்து செர்கேவிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக விசாரணைக்கு பிறகே என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |