கோவையில் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கணபதி சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் தீபா(21). தீபா பி.காம் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது பெற்றோருக்கு தீபா வேலைக்கு செல்வதில் சம்மதம் இல்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் தீபாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் தீபா சிறிது நாட்களாவது வேலைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் தீபா கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.