மேளதாளங்களுடன் ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து இறுதிப் போட்டியில் 4வது இடத்தைப் பெற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வீட்டுக்கு திரும்பிய ரம்யாவை அவரது குடும்பத்தினர் அசத்தலாக வரவேற்றுள்ளனர் .
மேளதாளங்கள் முழங்க ,பட்டாசுகள் வெடிக்க காரிலிருந்து இறங்கிய ரம்யாவிற்கு மாலை அணிவித்து வரவேற்கின்றனர். பின்னர் சாலையிலேயே தன்னை வரவேற்க வந்த தோழிகளுடன் குத்தாட்டம் போடுகிறார் ரம்யா . இதையடுத்து தன் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார் . தற்போது ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் மேளதாளத்துடன் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .