Categories
தேசிய செய்திகள்

பாட்னாவில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து…. நீரில் மூழ்கி 9 பேர் பலி …. சோகம்!!!

பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த சிலர் வேனில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்திற்குள்ளானது.

பீகாரில் பாட்னாவை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த  வேன் கங்கைநதி பாலம் வழியே சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது வேன் திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கங்கைநதி பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினார்.  அதில்  9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் சிலரின் உடலை காணவில்லை என்றும் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர் . இந்த மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் என அனைவரும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |