Categories
உலக செய்திகள்

மின்வெட்டால் பலியான நோயாளிகள்.. பிரபல நாட்டில் நேர்ந்த துயரம்..!!

ஜோர்டான் என்ற மத்தியகிழக்கு நாட்டில் மின்இணைப்பு துண்டிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோர்டான் தலைநகரான Amman-ல் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மின் அழுத்தத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) -ல் இருந்த கொரோனா பாதித்த நோயாளிகள் இருவர் பலியாகினர்.

இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சரான Firas Al-Hawari என்பவர் உறுதிப்படுத்தினார். அதன் பின்பு உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தத்தொடங்கினர். எனவே அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |