பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலி பணியிடங்கள் இருப்பதாக இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது “இந்திய ராணுவத்தில் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 வீரர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. மேலும் இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4,850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1,265 அதிகாரிகள் மற்றும் 11,166 வீரர்கள் பணியிடங்களும் காலியாக இருக்கிறது.
எனவே பாதுகாப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதை அதிகரிக்க பள்ளி, கல்லூரிகள் மற்றும் என்சிசி முகாம்களில் ஊக்குவிப்பு உரைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.